July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய பிரஜைகளின் சட்டவிரோத நுழைவு இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிறது எதிர்க்கட்சி

இந்தியாவிலிருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக அண்மைய நாட்களில் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைவது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றும் தெரிவித்தார்.

மன்னார், புத்தளம் மற்றும் கொச்சிக்கடையில் ஆகிய கடல் பரப்பிலிருந்து படகுகள் மூலம் நாட்டிற்குள் நுழைந்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் இந்த சம்பவங்கள் குறித்து குறித்த பிரதேச வாசிகள் அறிவித்த பின்னரே அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் அறிந்திருக்கிறார்கள்.

மேலும் குறித்த தகவல் மக்களால் வழங்கப்பட்ட போதிலும், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தவோ,அவர்களை தனிமைப்படுத்தவோ அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன்,கொரோனா தொடர்பான அனைத்து இறப்புகளுக்கும் தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும்,
கொரோனா வைரஸ் தொடர்பாக தகுந்த முடிவுகளை எடுக்கத் தவறிய அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி வலியுறுத்தினார்.