
கொரோனா வைரஸ் அபாய நிலையிலுள்ள இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகள் தொற்றிலிருந்து விடுபட வேண்டி இலங்கையில் இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த வழிபாடுகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
வழிபாடுகளின் நிறைவில் இந்திய மக்களுக்காக பிரார்த்தித்து அந்த நாட்டு பிரதமருக்கான கடிதங்கள் இந்திய துணைத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.