January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா நெருக்கடியை தடுக்க 7 பரிந்துரைகளை செயல்படுத்துமாறு மருத்துவர் சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் நெருக்கடி நிலைமையை கட்டுப்படுத்த மூன்று மருத்துவ சங்கங்கள் உள்ளிட்ட நான்கு அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஏழு பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை அனுப்பியுள்ளன.

குறித்த கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை அந்த அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ உத்தியோகத்தர் சங்கம், மருத்துவ விசேட நிபுணர்கள் சங்கம் மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் இடைக்கல்லூரிக் குழு ஆகியன இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு  கூட்டாக இந்த கடிதத்தை எழுதியுள்ளன.

தாம் முன்வைத்துள்ள ஏழு பரிந்துரைகளை கூடிய விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யு) நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள குறித்த அமைப்புகள் ,எனவே நாடு அதிகமான இழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும்  குறிப்பிட்டுள்ளனர்.

கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தல், அறிகுறியற்ற நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தல் மற்றும்  மருத்துவ உபகரணங்களை அதிகரித்தல் ஆகிய முக்கிய கோரிக்கைகளையும் இந்த கடிதத்தில் அந்த அமைப்புகள் முன்வைத்துள்ளன.

மருத்துவர்கள் முன்வைத்துள்ள 7 பரிந்துரைகள் வருமாறு,