
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பதில் பிரதிநிதி டாக்டர் ஒலிவியா நிவேராஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
உலகம் எதிர்கொண்டுள்ள கொரோனா தொற்று நிலை மற்றும் இலங்கையின் சவால்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, கொரோனா நெருக்கடியைச் சமாளிப்பதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பதில் பிரதிநிதியிடம் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக ஒலிவியா நிவேராஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் விசேட மருத்துவ நிபுணர்களான பேராசிரியர் நாலிகா குணவர்தன, டாக்டர் பாலித அபேகோன் மற்றும் டாக்டர் பத்மலால் டி சில்வா ஆகியயோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இதேநேரம், நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவருடன் இணையவழியில் கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.