January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 ஆயிரம் கட்டில்கள் ஏற்பாடு

கொரோனா  நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பத்து நாட்களுக்குள் 10,000 கட்டில்கள்  ஏற்பாடு செய்யப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து செல்லும் கொரோனா தாக்கம்  தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பத்தாயிரம் கட்டில்களுக்கு மேலதிகமாக மாவட்ட மட்டத்தில் மேலதிக சிகிச்சை நிலையங்களை இனங்கண்டு அவற்றுக்கு தேவையான கட்டில்களும் உபகரணங்களும் வழங்கப்படும் எனவும் இதன் பொறுப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை பொறியியலாளர் முன்னணி வைத்தியசாலைகளின் தொழில்நுட்ப குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு முன் வந்துள்ளதாகவும் பசில் ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்துள்ளார்.