சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவையின் போது பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம், ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சினோபார்ம் தடுப்பூசியை அவசர தேவைக்காக பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று (வெள்ளிக்கிழமை)அனுமதி வழங்கியிருந்த நிலையில்,இலங்கையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,இலங்கையில் இன்று (சனிக்கிழமை) முதல் சினோபார்ம் தடுப்பூசி விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது..
சீனா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 600,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசியிகள் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியன்று இலங்கையை வந்தடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.