July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான தரவுகளை புதுப்பிக்கும் முயற்சியில் உலக வங்கி

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை உலக வங்கி ஆரம்பித்துள்ளது.

இலங்கைக்கு மிகவும் அவசியமான அபிவிருத்தி வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள் தொடர்பாக தம்மிடம் உள்ள தரவுகளைப் புதுப்பிப்பதே, இவ்வாறு தகவல் சேகரிப்பதன் எதிர்பார்ப்பாகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் வறுமை ஒழிப்பிற்காக இவ்வாறான அறிக்கையிடல்களை மேற்கொள்வதாகவும் பொதுமக்கள் தகவல்களை வழங்கி பங்களிக்க வேண்டும் என்றும் உலக வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்காக அரச மற்றும் தனியார் துறையினர் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த பிரஜைகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுமென உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாரிஸ் ஹதத் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் 19 செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அதற்காக 2.33 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.