இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 130 கர்ப்பிணிகளின் இரண்டு கர்ப்பிணிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று குடும்ப சுகாதார பணியகத்தின் தாய் மற்றும் குழந்தை நல இயக்குநர் வைத்தியர் சித்ரமலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளில் அதிகமானவர்கள் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை மற்றும் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியர் சித்ரமலி டி சில்வா தெரிவித்தார்.
மேலும்,கர்ப்பிணிகள் முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படியும் கொரோனா சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வைத்தியர் சித்ரமலி டி சில்வா வலியுறுத்தினார்.