
கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணத்தின் 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசங்களில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால், இவ்வாறு உடனடியாக முடக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரவலபிடிய, வத்தளை, ஹேகிட்ட, பள்ளியாவத்த தெற்று ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், மஹபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரங்கபொகுன, கல் உடபிட மற்றும் மட்டுமகல கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் நாகொட தெற்கு கிராம சேவகர் பிரிவின் விஜத மாவத்தை, வித்யாசர மற்றும் மஹவாஸ்கடுவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
யடதொலவத்த கிராம சேவகர் பிரிவின் கொரடுஹேன பகுதியும் முடக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் மத்தி மற்றும் கொடிகாமம் வடக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.