May 2, 2025 2:25:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் கைது!

மட்டக்களப்பு – சித்தாண்டி பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்தவர் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து 21 வயதான குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.