கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தீவிர சிகிச்சை பிரிவுகளில் பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் டாக்டர் கோட்டபய ரணசிங்க தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இதய நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. ஆனால் நாங்கள் தற்போது கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவர்களை இடம் மாற்றப் போகிறோம் ”என்று கோட்டபய ரணசிங்க கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மகப்பேற்றியல் மற்றும் பெண்ணோயியல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிரதீப் டி சில்வா, “கொவிட் நோயாளிகளுக்கு மாத்திரம் பிரத்தியேகமான தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளதா என்பது தற்பொழுது கேள்விக்குறியாகவே உள்ளது என்று தெரிவித்தார். .