புற்றுநோயை ஏற்படுத்தும் வேதி பொருள் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்ட சுத்திகரிக்கப்படாத 230 மெற்றிக் டொன் தேங்காய் எண்ணெய் இன்று (வெள்ளிக்கிழமை) மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்கப் பிரிவின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்காக ‘எவர் எதிக்’ என்ற கப்பல் மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
20 அடி நீளமான 12 எண்ணெய் தாங்கி கொள்கலன்கள் மூலம் 230 மெற்றிக் டொன் நிறைகொண்ட தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அப்லோரொக்சின் புற்றுநோய் வேதிப்பொருள் அடங்கிய 1,850 மெற்றிக் டொன் தேங்காய் எண்ணெய்யை 3 நிறுவனங்கள் இறக்குமதி செய்திருந்தன.
அவற்றுள் 105 மெற்றிக் டொன் தேங்காய் எண்ணெய்யை மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்ய எதிரிசிங்க நிறுவனம் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.