February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 23 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  அவர்களில் 23 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தொற்று உறுதி கண்டறியப்பட்டவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  அந்த பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸாருடன்  தொடர்பிலிருந்தவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் நோய் அறிகுறிகள் தென்படுகின்ற போது உடனடியாக தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறும் சுகாதார துறையினர்
கேட்டுக்கொண்டுள்ளனர்.