யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை யாழ். பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபருக்கு ஏற்கனவே நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவு உள்ள நிலையில், அவர் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது அவரது வீட்டிலிருந்து 14 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.