
இலங்கையின் சட்டமா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னத்தை நியமிப்பதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளதாக தெரியவருகிறது.
தற்போதைய சட்டமா அதிபர் தப்புல லிவேரா எதிர்வரும் 24 ஆம் திகதி தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இதனால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிசிட்டர் ஜெனரலான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னத்தை நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு பேரவைக்கு அவரின் பெயரை அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.
சட்டமா அதிபர் போன்ற உயர் பதவிகள் குறித்த தீர்மானங்களுக்கு சபாநாயகர் தலைமையிலான அரசியல் அமைப்புச் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது.
இதன்படி சஞ்சய ராஜரத்னத்தின் பெயர் அரசியல் அமைப்பின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.