இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹல்புத்த, கெஸ்பேவ கிழக்கு, மாகந்தர மேற்கு, பெல்ஹேன மற்றும் நிவுன்கம கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிம்புர கிராம சேவகர் பிரிவு மற்றும் மதுகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யட்டியான மேற்கு கிராம சேவகர் பிரிவு ஆகிய பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் கடவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்தெனிய கிழக்கு, சூரியபாலுவ மேற்கு, சூரியபாலுவ வடக்கு, பஹல கரகஹமுன வடக்கு மற்றும் இஹல கரகஹமுன வடக்கு கிராம சேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த களுத்துறை மாவட்டத்தின் பதுரலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இங்குருதலுவ கிராம சேவகர் பிரிவு மற்றும் மீஹகஹதென்ன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெலவத்த கிழக்கு, மிரிஸ்வத்த மற்றும் பஹல ஹேவெச்ச கிராம சேவகர் பிரிவுகள் முடக்க நிலையில் இருந்து இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.