
கடந்த 14 நாட்களுக்குள் இந்தியா சென்ற எந்த ஒரு பயணியையும் மீண்டும் இலங்கைக்குள் அனுமதிக்காமல் இருக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து விமான சேவைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீர்மானத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் வௌியிடப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.