அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் அலுவலக வளாகத்திற்குள் கலந்துரையாடல்கள், ஒன்று கூடல்கள் மற்றும் விழாக்கள் முன்னெடுக்கப்படுகின்றமை நிரூபிக்கப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
பல நிறுவனங்கள் நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு செயற்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக நாட்டில் நடைமுறையில் உள்ள கொவிட் தடுப்பு சட்டத்திற்கு அமைய வழக்கு தொடர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதுவரை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த அவர் நாடு ஒரு ஆபத்தான சூழ்நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.