January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருக்கோவிலில் உள்ளூர் துப்பாக்கிகள் தயாரித்த மூவர் கைது!

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்டவிரோத துப்பாக்கித் தயாரிப்பில் ஈடுபட்ட நிலையமொன்று தேசிய புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 10 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் திருக்கோவில் பிரதான வீதியில் உள்ள அம்மன் ஆலயத்துக்கு அருகிலுள்ள குறித்த இப்பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

உள்ளூர் துப்பாக்கித் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 60 வயதான தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இதன் போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கியின் மரத்திலான பாகத்தை தயாரிப்பவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், தச்சுத் தொழிலாளியான தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 40 வயதான நபர் ஒருவரும், இத் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் காஞ்சரங்குடா பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.