January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 22 புகையிரத சேவைகள் மறு அறிவித்தல் வரை இரத்து

Train Common Image

இலங்கையில் 22 புகையிரத சேவைகள் இன்று முதல்(06) ரத்து செய்யப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இரவு நேர தபால் ரயில் சேவைகள் மற்றும் அலுவலக சேவைகள் உள்ளிட்ட 22 புகையிரத சேவைகள் இவ்வாறு மீண்டும் அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.