May 29, 2025 14:39:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எம்ஐ- 17 ரக விமான கொள்வனவு; எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு விமானப்படை பேச்சாளர் பதில்

File photo: SL Airforce

இலங்கை நான்கு எம்ஐ- 17 விமானங்களை ரஷ்யாவிடம் இருந்து இலகு கடன் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யவுள்ளதாக விமானப்படை பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடி நிலையில் அரசாங்கம் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் கவலை வெளியிட்டிருந்தார்.

ரஷ்யாவுடனான நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இவ்வாறு நான்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாகவும், இந்த விமானங்களை ஐநா அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் பதிலளித்துள்ளார்.

ஐநா அமைதி காக்கும் பணியில் ஈடுபடுவதற்காக கிடைக்கும் நிதி மூலம் இந்த விமானங்களுக்கான கடனை இலகு வட்டி வீதத்தில் செலுத்த முடியும் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது.

எம்ஐ- 17 ரக விமானங்களை இலகு வட்டி வீதத்தில், நீண்ட கால கடன் திட்டத்தின் அடிப்படையில் வழங்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விமான கொள்வனவு இப்போது முன்னுரிமையான விடயம் அல்ல என்றும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியிருந்தார்.