May 6, 2025 4:56:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெலோ இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 35 ஆவது நினைவு தின நிகழ்வு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) ஸ்தாபக தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 35 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று யாழ்ப்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ். உரும்பிராயில் சிறீ சபாரத்தினம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இடத்திலேயே அந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

நினைவு தின நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என சிலர் கலந்துகொண்டிருந்தனர்.