November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் ஜனாதிபதியின் நியமனத்தை ஏற்க மறுத்த சட்டமா அதிபர்

கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்தப் பதவிக்காக சட்டமா அதிபரின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், தாம் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள போவதில்லை எனவும், நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சட்டமா அதிபர் தனது பதவிக்காலத்தில் 22,206 குற்றவியல் வழக்கு விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதி இவ்வாறான ஓர் பதவியை வழங்கியமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், எனினும் தாம் இலங்கையிலேயே இருந்து கொண்டு நாட்டு மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் லிவேரா கூறியதாக சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.