May 28, 2025 20:31:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ரஷ்ய ஸ்புட்னிக் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது தொகுதியை இலங்கையர்களுக்கு ஏற்றும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா முதல் கட்டமாக இலங்கைக்கு 15 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை அன்பளிப்பு செய்திருந்தது.

இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், ரஷ்ய தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் இன்று தேசிய மருந்தகக் கூட்டுத்தாபண பணிப்பாளரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.