May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமரின் ‘இப்தார்’ நிகழ்வில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்

முஸ்லிம் மக்கள் சார்பாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘இப்தார்’ நோன்பு திறக்கும் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் பங்கேற்புடன் நேற்று இடம்பெற்றது.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்கேற்புடன் நடைபெறும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட்-19 தொற்று காரணமாக, இவ்வாறு சுருக்கமாக நடைபெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் கட்சிகள் சிலவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், இதன்போது முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்துவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், எச்.எம்.எம்.ஹரீஸ், எஸ்.எம்.எம்.முஷரஃப், அலி சப்ரி ரஹீம், எம்.எஸ்.தௌபீக், இஷாக் ரஹ்மான், பைஸல் காசிம் மற்றும் பிரதமரின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பர்சான் மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.