இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவருக்கு இடையிலான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதும் அதனூடாக நாடு எதிர்கொண்டுள்ள சவால்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக எதிரிக்கட்சித் தலைவரின் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் ஐநா ஒத்துழைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாம் இலங்கைக்கு அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கட்சி பேதம் இன்றி தாம் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி கொரோனா விடயத்தில் அரசியல் செய்யாது என்றும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.