May 25, 2025 4:55:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுவரெலியா, திருகோணமலையில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன!

Lockdown or Curfew Common Image

நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இரண்டு பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பனன்கம கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுபத்ராலங்கா மாவத்தை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் நிலவும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு அந்த பிரதேசங்களை தனிமைப்படுத்த தீர்மானித்ததாக கொவிட் தடுப்பு செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.