
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து வரும் பயணிகளை கட்டுப்படுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனாவின் புதிய மாறுபாட்டின் பரவலைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுகாதார அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, இந்தியாவில் இருந்து பயணிக்கும் பயணிகள் இலங்கையில் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.