May 24, 2025 16:10:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா நிதி வேறு எந்த திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படாது; நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்த திட்டங்களுக்கும் அரசாங்கம் பயன்படுத் தாது என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து நிதிகளையும் நிதி அமைச்சர் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள கொள்களன் உடற்பயிற்சி மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் ரூபா நிதியை கொரோனா தடுப்புக்கு பயன்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும்போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்,பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியே இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும் நாமல் ராஜபக்ஷ  மேலும் தெரிவித்தார்.

கொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களை நிறுவுவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை செவாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியிருந்தது.

வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களை நாடளாவிய ரீதியில் அமைப்பதற்காக 625 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான திட்டத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.