ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 ஆவது கூட்டம் இன்று (புதன்கிழமை) மெய்நிகர் வழியாக நடைபெற்ற போதே, உத்தியோகபூர்வமாக இந்த தெரிவு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 2021/2022ஆம் ஆண்டுக்கான ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்பட உள்ளார்.
ஜோர்ஜியாவின் திபிலிசியில் முதலில் நடத்த திட்டமிடப்பட்ட வருடாந்த கூட்டம் தற்போதைய கொரோனா தொற்று நோயால் மெய்நிகர் வழியாக நடைபெற்றுள்ளது.
இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் 55 ஆவது ஆண்டு கூட்டம் அடுத்த ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.