January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பில் ஆராய அமைச்சர் தினேஷ் தலைமையில் 15 பேர் கொண்ட குழு நியமனம்

தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமை குறித்து சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்காக சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் 15 பேர் கொண்ட பாராளுமன்ற விசேட குழுவை சபாநாயகர் நியமித்துள்ளார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணுதல் மற்றும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பது இந்த குழுவின் பணியாகும்.

இது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் வெளியிட்டார்.

இந்த பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பவித்ரா தேவி வன்னி ஆராச்சி, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, எம்.யு.எம் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர திசாநாயக, கபீர் ஹாசீம், ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், மதுர விதானம்கே, சாகர காரியவசம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் சபையில் அறிவித்தார்.