May 23, 2025 2:39:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். நகரில் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது!

யாழ்ப்பாணம் நகரில் முகக் கவசம் அணியாத மற்றும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றாது நடமாடியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். நகரில் கொவிட் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் நகர் பகுதியில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, முகக்கவசம் அணியாது சுற்றித் திரிந்த மற்றும் சுகாதார நடைமுறையினை முறையாக பின்பற்றாத 30 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள்,வீதிகளில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.