
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தார்.
ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டொ, இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், டி.வி.சானக ஆகியோர் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்களுடன் பாராளுமன்ற சபை மண்டபத்துக்கு வந்த ஜனாதிபதி, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருடன் சபையில் அமர்ந்தார்.
ஜனாதிபதி அவர்கள் சபையில் அமர்ந்திருந்தபோது வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன உரையாற்றினார்.
சிறிது நேரத்தில் சபையிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்துக்குச் சென்றார்.