November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா வைரஸ் பரவலின் சவால்மிக்க கட்டத்தை இலங்கை அடைந்துள்ளது’: உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கையர்கள் வைரஸின் ஆபத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா பரவலின் சவால்மிக்க கட்டத்தை இலங்கை அடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி கலாநிதி ஒலிவியா நீவேராஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கொரோனா பரவல் அச்சுறுத்தல் தொடர்பாக வீடியோ செய்தியொன்றை வெளியிட்டு, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம், சுகாதார அமைச்சு, முன்கள சுகாதாரப் பணியாளர்கள் வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும், பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி, உயிர்களைக் காப்பாற்றும் விடயத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கலாநிதி ஒலிவியா நீவேராஸ் தெரிவித்துள்ளார்.