படை வீரர்கள் நினைவு மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.
ரணவிரு சேவா அதிகார சபையின் பதில் தலைவர் சோனியா கோட்டேகொடவினால் இந்த கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.
மூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சுதந்திரமானதொரு தேசத்திற்காக அர்ப்பணிப்புகளை செய்த படை வீரர்களை நினைவுகூரும் வகையில் படை வீரர்கள் மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மே மாதம் முதலாம் வாரத்தில் ஜனாதிபதிக்கு தேசிய படை வீரர்கள் கொடி அணிவிக்கப்பட்ட நாள் முதல் படை வீரர்கள் நினைவு மாதம் ஆரம்பமாகிறது.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்னவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.