ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் நாடு முழுவதும் பதிவான 1,959 வீதி விபத்துகளில் 205 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,254 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி, ஆண்டின் பிற மாதங்களுடன் ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் அதிக விபத்துக்கள் பதிவாகியுள்ளன,என்றும் குறிப்பாக சிங்கள-தமிழ் புத்தாண்டு பருவகாலத்தில் இந்த விபத்துகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மேல் மாகாணத்திலேயே அதிகமான விபத்துகள் 768 பதிவாகியுள்ளது.அதேபோல், வடமேற்கு மாகாணத்தில் 237 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளே கடுமையான சாலை விபத்துக்களில் சிக்கியுள்ள என்றும்
திங்கள் கிழமைகளில் அதிக விபத்துக்கள் இடம்பெறுகின்றன எனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.