இலங்கையில் வேலைவாய்ப்பு தொகை 2019 ஆம் ஆண்டில் 8.181 மில்லியனிலிருந்து 2020 ஆம் ஆண்டில் 7.999 மில்லியனாக குறைந்துள்ளது.இது 182,000 (2.22 சதவீதம்) சரிவு என்று இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், 2019 ஆம் ஆண்டில் 1.467 மில்லியனுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டின் மொத்த பொதுத்துறை வேலைவாய்ப்பு 61,000 அதிகரித்ததுடன், 1.528 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் அமைச்சுகள், துறைகள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், மாகாண சபைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாளர்கள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கும் 100,000 வருமானம் ஈட்டுபவர்களுக்கும் மிகக் குறைந்த வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான அரசு வேலைத்திட்டத்தின் காரணமாக பொதுத்துறை வேலைவாய்ப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேளாண்மையில் வேலைவாய்ப்பின் பங்கு 2019 ல் 25.3 சதவீதத்திலிருந்து 2020 ல் 27.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல்,தொழில்துறை மற்றும் சேவைகளில் வேலைவாய்ப்பின் பங்குகள் 26.9 சதவீதமாகவும் 46.0 சதவீதமாகவும் குறைவடைந்துள்ளன.