May 24, 2025 10:31:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டன

Lockdown or Curfew Common Image

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே இன்றிரவு(செவ்வாய்க்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுகிறது.

அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் குறித்த கிராமங்களுக்கு செல்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.