October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 1,914 பேருக்கு கொரோனா தொற்று ; சில பகுதிகளும் முடக்கப்பட்டன

இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தினசரி தொற்றாளர் எண்ணிக்கை மொத்தம் 1,914 ஆக பதிவாகியுள்ளது.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 115,590 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஏழு நாட்களில் 11,000 புதிய கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் பதிவாகியுள்ளனர். இது 70% அதிகரிப்பை காட்டுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்தது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99,153 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்தோடு, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 709 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை)இலங்கையில் 1923 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களில் 529 பேர் கொழும்பிலும்  232 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 264 பேர் களுத்துறை மாவட்டத்திலும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நேற்று (திங்கட்கிழமை) பதிவான தொற்றாளர்களின் விபரம்…

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

இன்று செவ்வாய்கிழமை காலை 7 மணி முதல் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

அதற்கமைய நுவரெலியா மாவட்டம் – நோர்வூட் பொலிஸ் பிரிவில் இன்ஜஸ்ரீ கிராம உத்தியோகத்தர் பிரிவு , ஹட்டன் பொலிஸ் பிரிவில் போடைஸ் கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் கடவத்த பொலிஸ் பிரிவில் எல்தெனிய தேவாலய வீதி , ரணவிரு தர்மசிறி மாவத்தை என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் கங்குல்விட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு , இறக்குவானை பொலிஸ் பிரிவில் பொத்துபிட்டி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு , கலவான பொலிஸ் பிரிவில் ஹபுகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று, கொழும்பு மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவில் வில்லோரவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் களுத்துறையில் தொடங்கொட பொலிஸ் பிரிவில் போம்புவல கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.