November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டால் நாடு அபாயத்தில்’ ; இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

பொதுமக்கள் பொறுப்புணர்வின்றி நடந்து கொள்வதால் நாட்டின் சுகாதார கட்டுப்பாடு சுகாதாரத் துறையின் கையை மீறிப்போகும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலானோர் முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்து வருவதால் நாட்டில் தினசரி தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

இந்த நிலைமை தொடர்ந்தால், மருத்துவமனையில் அதிகரிக்கும் நோயாளர்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் காரணமாக சுகாதாரத் துறை கட்டுப்பாட்டை இழக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த மாதம் 27 ஆம் திகதி முதல் நாட்டில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது, இது சுமார் 70 சதவீதம் அதிகரிப்பு என்று உபுல் ரோஹன சுட்டிக்காட்டினார்.

எனவே, நாட்டில் கோவிட் -19 பாதிப்பை தடுக்க சரியான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி சுகாதாரத் துறைக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன பொதுமக்களை அறிவுறுத்தினார்.