2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
டிசம்பர் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
இதன்படி சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளை பெற்று 2.9422 இசட் புள்ளிகளுடன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இதவேளை உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்ற அவர் 2.8677 இசட் புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 17 ஆம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
மேலும் கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் இப்ராஹிம் அன்பஸ் அகமெட் உயிரியல் பிரிவில் தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, வவுனியா மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதல் இரு இடங்களையும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலம் பெற்றுள்ளது.
அந்தவகையில் மாவட்டமட்டத்தில் கணிதப்பிரிவில் மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளைபெற்று முதலாம் இடத்தை அபிதனும், இரண்டாம் இடத்தினை வாகிசனும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவிகளான ஜெயரத்தினம் ஜெயப்பிரதா கலைப்பிரிவில் 3 A சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் 1 ஆம் இடத்தினையும், இராமநாதன் புஸ்பலீனா கலைப்பிரிவில் 2 A, B பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.