
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 31 ஆம் திகதி குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நியாயமான காரணங்கள் இன்றி தான் கைது செய்யப்பட்டதால், தனது உரிமை மீறப்பட்டுள்ளதாக அசாத் சாலி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான எல்.டி.பி. தெஹிதெனிய, பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அசல வெங்கப்புளி ஆகியோர் முன்னிலையில் இந்த மனு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மே மாதம் 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள திகதி குறிக்கப்பட்டுள்ளது.
அசாத் சாலி சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அசாத் சாலி மீதான விசாரணைகள் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.