போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு புனர்வாழ்வு விசேட அதிகாரியாக கீதனாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமரால் வடக்கு,கிழக்கு மாகாணத்திற்கான விசேட அதிகாரியாக கீதனாத் காசிலிங்கம் முன்மொழியப்பட்ட நிலையில், இந்த நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பிரதமரின் இணைப்புச் செயலாளராக கடமையாற்றும் கீதனாத் காசிலிங்கத்திற்கு இது மேலதிக பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரியின் கீழ் வாழ்வாதாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஆராய்வது மற்றும் நீண்டகால பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பது என்பன இவரின் புதிய பொறுப்புகளாக அமையும்.