January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2020 ஆம் ஆண்டின் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!

2020 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த உயர்தர பரீட்சைகள் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதி வரை நடைபெற்றது.

உயர்தர பரீட்சைக்கு 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சைப் பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களின் ஊடாக பார்வையிடலாம்.