கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை நடத்தும் காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான காலத்தை குறைத்து கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.