May 24, 2025 22:41:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையை இரண்டு வாரங்களுக்கு முழுமையாக முடக்கவும்’: ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து

Lockdown or Curfew Common Image

இலங்கையை முழுமையாக முடக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

நாட்டை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முழுமைளாக முடக்கி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“மருத்துவமனைகளுக்கு தேவையான அளவு அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பிசிஆர் இயந்திரங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரியான தருணத்தில் சரியான முடிவு எடுப்பதே முக்கியமானதாகும்.

அரசாங்கம் கொரோனா மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது.

சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் சுகாதார வழிகாட்டல்களை வழங்க சுகாதார தரப்பினர் தவறிவிட்டனர்”

என்றும் வஜிர அபேவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.