
கொவிட் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இன்று காலை முதல் மேலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி கொழும்பு மாட்டத்தில் மொரடுமுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வில்லோராவத்த கிராம சேவகர் பிரிவு, கம்பஹா மாவட்டத்தில் கடவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்தெனிய தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ககுல்விடிய கிராம சேவகர் பிரிவு, இறக்குவானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொத்துபிட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவு, களவான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹபுகொட கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்களும் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி அறிவித்துள்ளது.
அதேபோன்று நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இன்ஜஸ்டி கிராம சேவகர் பிரிவு மற்றும் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போர்டயஸ் வத்த கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்களும் முடக்கப்பட்டுள்ளன.