
கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தையொட்டி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மரணித்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது கொரோனோ தொற்றில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது. கொரோனோ பெரும் தொற்றலிருந்து மக்கள் மீண்டு வரவேண்டும் என பிரார்த்திக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனோ தொற்று காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.