January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: ஹேமசிறி- பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக 800 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 800 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவர்களுக்கு எதிரான வழக்குகள் இரண்டு விசேட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாணை செய்யப்பட உள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளன.

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 800 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்திருந்த நிலையிலும், தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.