July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கர்ப்பிணி தாய்மார்களிடையே புதிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு!

இலங்கையில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 70 கர்ப்பிணித் தாய்மார்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொது சுகாதார வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

நாட்டில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸினால் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

குழந்தைகளுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவை மட்டுமே வழங்குமாறு பெற்றோரை வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா வலியுறுத்தினார்.

அத்தோடு, விட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற உணவுகளை வழங்குவதன் மூலம் சிறுவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து புதிய வைரஸிடமிருந்து பாதுகாப்பு பெற முடியும் எனவும் வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.